Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொந்த வீட்டில் திருடிய பில்டர்..! போலீஸை மிரள வைத்த வழக்கு

நெல்லை மாவட்டத்தில் சொந்த வீட்டில் நகை, பணத்தை திருடிய பில்டரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ஆர்.எஸ்.காலனி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவரது மனைவி சாந்தி. இசக்கிபாண்டி, பில்டராக உள்ளார். சாந்தியின் அக்காள் ராணி. இவரது கணவர் செல்வராஜ். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கேரளாவில் எஸ்டேட்டும் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு செல்வராஜ், இசக்கிபாண்டியிடம் 12 லட்சம் ரூபாயை கொடுத்தார். பிறகு அவர் கேரளாவுக்கு சென்றார்.

அந்த பணத்தை பாதுகாப்பாக பீரோவில் வைத்திருந்தார் இசக்கிபாண்டி. தீபாவளியையொட்டி வி.கே.புரத்தில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார் இசக்கிபாண்டி. இதன்பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவுகள் திறந்து இருந்தன. பீரோவில் இருந்த பணமும், இரண்டரை சவரன் நகையும் திருட்டுப் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கிபாண்டி, நெஞ்சு வலிப்பதாக கூறி வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். திருட்டு சம்பவம் தொடர்பாக சாந்தி, அம்பாசமுத்திரம் போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார், இசக்கிபாண்டியனின் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இந்த சமயத்தில் வழக்கின் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இசக்கிபாண்டிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சாந்தி புகார் கொடுத்ததாக முதலில் கருதினோம். இந்த திருட்டு சம்பவத்தில் இசக்கிபாண்டி வீட்டில் எந்த பூட்டுகளும் உடைக்கப்படவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்குத் தொடர்பாக இசக்கிபாண்டியின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இசக்கிபாண்டியிடம் தனியாக விசாரித்தோம். அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கைரேகையிலும் இசக்கிபாண்டியனின் ரேகை இருந்தது தெரியவந்தது.

செல்வராஜ் கொடுத்த 12 லட்சம் ரூபாயில் 3 லட்சம் ரூபாயை கட்டட பொருட்களை வாங்க செலவழித்துள்ளார் இசக்கிபாண்டி. மீதமுள்ள 9 லட்சம் ரூபாயை அவரது வாழை தோட்டத்தில் சாக்கு மூட்டையில் வைத்து புதைத்து வைத்திருப்பதாக இசக்கிபாண்டி தெரிவித்தார். அவர் சொன்ன இடத்திலிருந்து 9 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளோம். பணத்தை மட்டும் திருடாமல் மனைவியின் இரண்டரை சவரன் நகையையும் திருடியுள்ளார். இதையடுத்து இசக்கிபாண்டியை கைது செய்துள்ளோம். செல்வராஜிடம் பணம் திருட்டு போனதாக சொல்லி அவரை ஏமாற்றவே இசக்கிபாண்டி திருடியதாக தெரியவந்துள்ளது" என்றார்.

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ