Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை பிரியாணி கடைகளில் பூனை இறைச்சி: திடுக் தகவல்

சென்னையின் சில பகுதிகளில் இயங்கும் சாலையோர பிரியாணி கடைகளில் பூனை இறைச்சி பயன்படுத்தப்படுவதாக திடுக்கிடும் தகவலை 'The Huffington post' என்னும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் போலீஸ் குழு மிக மோசமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 பூனைகளை மீட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் பூனை இறைச்சியை தண்ணீரில் கொதிக்கவைத்து கொண்டிருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பெரும்பாலும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினர் தான் பூனை இறைச்சியை விற்பதாக கூறப்படுகிறது. அந்த சமூகத்தினரிடம்  விசாரணை நடத்தியதில் தங்களால் கோழி இறைச்சியை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால், பூனை இறைச்சியை உண்பதாக கூறியுள்ளனர். மேலும் ஒரு கிலோ பூனைக் கறி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகும்  தெரிவித்துள்ளனர். அந்த சமூகத்தினர் விழாக்கள் சிலவற்றில் பெரும்பாலும் பூனை பிரியாணி மற்றும் பூனை சூப் பறிமாறப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close