Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீனிக்ஸ் பறவை போல் முதல்வர் மீண்டு வருவார்: அப்போலோவில் நமீதா

'முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார்' என்று நடிகை நமீதா கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 41-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், முதல்வரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக நடிகை நமீதா இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, ''முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார் என்றும், முதல்வர் உடல் நலம் தேறி மக்களுக்காக மீண்டும் பணி செய்ய வருவார்'' என்றும் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ