Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மவுலிவாக்கம் கட்டடம் இன்று இடிக்கப்படுகிறது

சென்னை அருகே மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த இரண்டு அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை கிளப்பியது இந்த விபத்து. அதன் அருகே இருந்த மற்றொரு கட்டடத்தையும் இடிக்க பலதரப்பினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனால், அதை இடிக்க உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த அடுக்குமாடி கட்டடம் இன்று இடிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் உள்ள தூண்களில் வெடிமருந்து பொருத்தப்பட்டுள்ளது. அங்கு சில பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close