Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுவாணி ஆற்றில் அணை கட்ட கேரளாவுக்குத் தடை!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது 96-வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்டும்  திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை மத்திய அரசு வழங்கலாம் என்று அளித்த  பரிந்துரையை தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து  தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் முடிவுறும் வரையிலும் அல்லது தமிழ்நாடு அரசின் இசைவினை பெறும் வரையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு  அனுப்பியுள்ள கடிதத்தில், “The matter has been examined in the Ministry of Environment, Forest and Climate Change and it has been decided to keep the recommendations by Expert Appraisal Committee, in abeyance, till the references filed in Hon’ble Supreme Court against the Order of Cauvery Water Disputes Tribunal are settled or get a positive consent for the ensuing Project from Government of Tamil Nadu."

2012-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அட்டப்பாடி பாசனத் திட்டத்திற்காக கேரள அரசு அணை ஒன்று கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய பிரதமருக்கு 21.6.2012 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்கள்.  அந்த கடிதத்தில்,  காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் காவேரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரையிலோ அல்லது நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலோ கேரள அரசு எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என  கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டதுடன், மத்திய நீர் வளக்குழுமம் எந்த ஒரு தொழில் நுட்ப அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசால் இது குறித்து மத்திய அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன.

19.9.2013 அன்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய நீர் ஆதார அமைச்சகம்  அனுப்பிய கடிதத்தில் சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவினைப் பெற்ற பின்னர், காவேரி நடுவர் மன்றத்தின் இசைவைப் பெறும்படி கேரள அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது என தெரிவித்தது. 
மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழு (நுஒயீநசவ ஹயீயீசயளையட ஊடிஅஅவைவநந), 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 
28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெற்ற 92-வது கூட்டத்தில்,  அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு (Expert Appraisal Committee), ஒப்புதல் அளிக்க கேரள அரசு கேட்டுக் கொண்ட கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசின் கருத்தினை பெறுமாறும், தமிழ்நாடு அரசின் கருத்து பெறப்பட்டபின் தான், கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் முடிவு எடுத்தது.

இந்நிலையில், மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழு  2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற்ற 96-வது கூட்டத்தில் கேரள அரசின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு  அனுமதி அளிக்க மத்திய  சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.  மத்திய  நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.2013 நாளிட்ட கடிதத்திற்கும், மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் மார்ச் மாதம் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெற்ற கூட்ட முடிவிற்கும் முரணானதாக இந்த பரிந்துரை அமைந்தது.

இக்குழு தமிழ்நாட்டின் கருத்தினைப் பெறாமல் முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்தும், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு இதன் தொடர்பாக  கடிதங்கள் ஏதும் வரவில்லை என்பதை எடுத்துரைத்தும், அவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக  இக்குழுவின் நடவடிக்கை குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, உண்மைக்கு மாறானதாகும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா 27.8.2016  அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்கள்.  மேலும், இப்பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லுநர் மதிப்பீட்டுக்குழு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான நிலையான ஆய்வு வரம்புகள்  வழங்குவதற்கு அளித்த பரிந்துரையை உடனடியாக  திரும்பப் பெற மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த முகமைகளுக்கு அறிவுரை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும்,  கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு  மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நீர் ஆதார அமைச்சகம் ஆகியன அனுமதி அளிக்கக் கூடாது எனவும்  கேட்டுக் கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா உத்தரவின்  பேரில், தலைமைச் செயலாளர் அவர்கள் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கும் மற்றும் நீர் ஆதார அமைச்சகத்திற்கும் இதே கருத்துக்களை வலியுறுத்தி 30.8.2016 அன்று கடிதம் அனுப்பினார். முதலமைச்சர் இது தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை 2.9.2016 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்மொழிந்தார். அதன் அடிப்படையில்,  மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.2013 ஆம் நாளிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளபடியும்,  மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக்குழுவின் 92-வது கூட்டத்தில் தெரிவித்துள்ளபடியும், தமிழ்நாடு அரசு மற்றும் காவேரி நடுவர் மன்றத்தின் இசைவு இல்லாத நிலையில், மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக்குழு 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை  மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என தமிழ்நாடு சட்டப் பேரவை  மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஒரு மனதாக  நிறைவேற்றியது.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய தினமே  பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களை விரிவாக எடுத்துரைத்து பிரதமர், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆதார அமைச்சகம் ஆகியவற்றை இத்தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக மேல்நடவடிக்கை தொடர அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் மேற்கொண்ட  தொடர் நடவடிக்கைகளின் காரணமாக  சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ