Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் அ.தி.மு.க.வுக்கு என்ஆர் காங்கிரஸ் ஆதரவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு, என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமிக்கு மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகின்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றார். தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து இதுவரை அமைதியாக இருந்த எதிர்க்கட்சி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிகாரம், பணபலத்தோடு களமிறங்கும் எதிர்க்கட்சியை முறியடிக்கவே இந்த முடிவு என்றும் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் அதிமுகவுடன் இணைந்து பணியாற்றும்.  இது திணிக்கப்பட்ட தேர்தல். இதற்கு காரணமானவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். இதனை நெல்லித்தோப்பு தொகுதி மக்களும் நன்கு அறிவார்கள். அதிமுகவுக்கு ஆதரவு என்பது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் பிரசாரம் செய்வோம், குழுக்கள் அமைப்போம். தேர்தலில் முறைகேடுகள், பணபலம், அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. பொது தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

இதன்மூலம் தனது அரசியல் எதிரியான முதல்வர் நாராயணசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார் ரங்கசாமி. இன்று மதியம்தான் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார் நாராயணசாமி.

ஜெ.முருகன்

படம்: அ.குரூஸ்தனம்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close