Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 92 ஆக உயரும்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தற்போது திமுகவின் பலம் 89 ஆக இருக்கிறது. இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில், திமுக, அதிமுக, தேமுதிக போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர்  திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தருமபுரியில் இன்று நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசியபோது இவ்வாறு தெரிவித்த மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

எடிட்டர் சாய்ஸ்