Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல்-கௌதமியை கவனித்தீர்களே! இவற்றை கவனித்தீர்களா?

‘‘ஹாய்..! உனக்கு விஷயம் தெரியுமா? கௌதமி கமலைப் பிரிஞ்சுட்டாங்களாம்! ப்ச்!’’ என தொலைபேசியில் யாரோ ஒருவரிடம் சோகமாக உரையாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண். அவர் மட்டுமல்ல, சிமி கைதிகள் சுடப்பட்ட சம்பவம், அப்போலோவிலிருந்து முதல்வர் எப்போது வருவார் என்னும் கவலை, தமிழ்நாட்டின் 60-வது பிறந்ததினம் என பரபரப்பாக நாட்டைப் பற்றிய நிகழ்வுகளைச் சிந்தித்துக்கொண்டிருந்த மக்களை, ‘13 வருடங்களாக இணைந்துவாழ்ந்த கமலைப் பிரிந்துவிட்டேன்’ என்று வெளியிட்ட தனது ஒரு ப்ளாக் கட்டுரையின் வழியாகத் தன் பக்கம் கவனிக்கவைத்துள்ளார் கௌதமி. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதே தவறு என்றும், தனது சுயவாழ்க்கை பற்றி முக்கியப்புள்ளி ஒருவர், தானேவந்து பொதுவில் அறிவிக்கலாமா என்பது குறித்தும் பல கோணங்களில் இதன்மீது விவாதங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன. மறுபக்கம், மோடியைச் சந்தித்ததுவிட்டு வந்ததற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று தீவிர கோணங்களில் எல்லாம் மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்த அதிமுக்கியச் செய்திகளுக்கிடையே மக்கள் கவனிக்காமல் விட்ட வேறுபல செய்திகள் என்னென்ன?

திறந்தவெளிக் கழிப்பறையே இல்லாத மாநிலமாக கேரளா அறிவிப்பு!

ஐபோன்-5 அல்லது ஐபோன்-6 என யோசிக்கும் அளவுக்கு டெக்னாலஜியில் வளர்ந்துவிட்டோம். ஆனால் திறந்தவெளியில் ஒரு குழந்தை மலம் கழிப்பதை இந்த நூற்றாண்டிலும் தடுத்துநிறுத்த முடியவில்லை. மூக்கை மூடிக்கொண்டுதான் செல்கிறோம். கிராமங்களில் இன்றும் 52.1 சதவிகிதம் பேர் வரை திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இதுதொடர்பாகப் பல்வேறு மாநிலங்களும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் கேரள மாநிலத்தில் ஒன்றரை லட்சம் அளவிலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து திறந்தவெளி புல்வெளிக்கழகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக கேரளா மாநில பிறப்புத்தினமான இன்று அதன் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலையேற்றம்!

கடந்த ஜூலை தொடங்கி இது ஆறாவது விலையேற்றம்! மானியம் உள்ள எரிவாயு மீதான விலையை இரண்டு ரூபாய் வரையும், மானியம் இல்லாத எரிவாயு மீதான விலையை சிலிண்டருக்கு ரூ.38 வரையிலும் அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன்படி தமிழகத்தில் சமையல் எரிவாயு ரூ.538-க்கு விற்கப்படும். நவம்பர் தொடக்கத்தில் தமிழகத்தில் அரிசியின் விலை ஏறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பலதரப்புகள் அறிவித்துள்ளன. சாமானியன் சமைத்துச் சாப்பிடுவது இனி எப்படி இருந்தாலும் சிக்கல்தான்.

ரேடாரில் சிக்காமல் பறக்கும் சீனாவின் ப்ராடக்ட்!

இந்தியாவுடனான சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பிரச்னை தொடர்ந்து கொதிநிலையிலேயே இருந்துவருகிறது. இந்த நிலையில் ரேடார் கண்காணிப்பில் தெரியாமல் பறந்து இலக்கைத் தாக்கும் விமானங்களை செங் டூ - ஜே 20 ரக விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. இது, மணிக்கு 2,100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்குமாம். ஒளியின் வேகத்தைவிட 150 மடங்கு குறைவு, அவ்வளவே! வாம்மா மின்னல்!

தகர்க்கப்படும் மவுலிவாக்கம் கட்டிடம்!

சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள 11 மாடிக் குடியிருப்புக் கட்டடம் இன்று மாநகராட்சியால் தகர்க்கப்பட இருக்கிறது. இதன் அருகில் இருந்த இதேபோன்ற கட்டடம், 2014-ல் பெய்த கனமழையில் இடிந்துவிழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் இறந்தனர். அந்தக் கட்டடத்தைப்போலவே இந்தக் கட்டடக் கட்டுமானத்திலும் சிக்கல் எழுந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

-ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close