Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டப்பேரவை நிகழ்ச்சியை ஒளிபரப்ப சாத்தியமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில் 

சட்டப்பேரவை நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வது சாத்தியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் பதில் அளித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப செய்யக்கோரியும், பேரவை நிகழ்ச்சிகள் குறித்து எழுத்துபூர்வமான பதிவுகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கோரியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் லோக் சத்தா கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வது சாத்தியமில்லை. அவைக்குறிப்புகள் மட்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ