Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று இரவு சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் முதல்வர் ஜெயலலிதா!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் எம்டிசிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரவு 2-வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

கடந்த 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தாெடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் சேர்த்து 42-வது நாளாக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். 2-வது தளத்தில் உள்ள எம்டிசிசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

2-வது தளத்தில் ஏற்கெனவே லேபர் வார்டு செயல்பட்டு வந்தது. இந்த லேபர் வார்டு தற்போது, அப்போலோ மருத்துவமனை அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எதிரே செயல்பட்டு வருகிறது. இதனால், 2-வது தளத்தில் உள்ள லேபர் வார்டு செயல்படாமல் இருந்து வந்தது. முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து லேபர் வார்டு பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. சகல வசதிகள் கொண்ட இந்த வார்டுக்கு இன்று இரவு முதல்வர் ஜெயலலிதா மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ