Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுதான் இப்போதைய மழை நிலவரம்...!


மிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை கடந்த 30-ம் தேதி தொடங்கி விட்டது. மாணவ, மாணவியர்கள் செய்தி சேனல்களின் ஸ்கிராலிங் செய்திகளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள். மழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்களே என்ற ஆசை அவர்களுக்கு. ஆனால் விடுமுறை விடும் அளவுக்கு  கனமழையாக இன்னும் மாறவில்லை.  


வழக்கத்தை விட தாமதம்

வடகிழக்குப் பருவமழை என்பது அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். வடகிழக்குப் பருவமழை மூலம்தான் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கிறது. இந்த முறை 10 நாட்கள் தாதமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த 30-ம் தேதி தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது.

கனமழை எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழ்நாட்டின் உட்பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. வரும் 4-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும். 5, 6-ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும்.

காற்றழுத்தப் பகுதி

கடந்த 1-ம் தேதி மத்திய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தப்பகுதி  உருவாகி இருந்தது. இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரனிடம் பேசினோம்.  
"காற்றழுத்தப்பகுதி இப்போது மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில்  இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கிக் செல்கிறது. அதன் பின்னரும் இது வலுப்பெறுமா என்பது 3-ம் தேதிக்கு மேல்தான் தெரியும். இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களின் உட்புறப்பகுதிகளிலும் மழை பெய்யும்" என்றார்.  

 

2015 மழை நிலவரம்
(அக்டோபர் 20 முதல் டிசம்பர் 31 வரை)
தமிழகம்-  673.3 மி.மீ
புதுச்சேரி- 1471 மி.மீ

சென்னை- 1608.6 மி.மீ
காஞ்சிபுரம்- 1815.0 மி.மீ
திருவள்ளூர்- 1466.6 மி.மீ
நாகபட்டினம்-- 1378.8 மி.மீ
கடலூர்- 1240.5 மி.மீ  

 

மழை அளவு

2-ம் தேதி காலை 8.30 மணிவரை அதிகபட்சமாக காரைக்காலில் 16.1 மி.மீ மழை பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக 0.1 மி.மீ மழை தூத்துக்குடியில் பதிவாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம்-2.0 மி.மீ
சென்னை விமான நிலையம்-5.8 மி.மீ
குன்னூர் -4.9 மி.மீ
கடலூர்-1.5 மி.மீ
கன்னியாகுமரி-4.9 மி.மீ
நாகபட்டினம்-0.3 மீ.மீ
பாம்பன்-2.8 மி.மீ
புதுச்சேரி-1.6 மி.மீ
திருப்பத்தூர்-9.4 மி.மீ
உதகமண்டலம்-0.4 மி.மீ
வேலூர்-3.6 மி.மீ

- கே.பாலசுப்பிரமணி
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ