Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகளை மீட்ட மீனவர்கள்

தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கியதால் தவித்த திருநெல்வேலியை சேர்ந்த  17 சுற்றுலாப் பயணிகள் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.


தனுஷ்கோடி பகுதியில் புயலால் பாதிப்படைந்த கட்டிட இடிபாடு பார்க்க சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இங்கு செல்ல முழுமையான சாலை வசதி இல்லை. சாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இதனால் தனியாருக்கு சொந்தமான வேன்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வருவது வழக்கம். இந்த வேன்கள் கடற்கரை ஓரமாக ஈர பதம் உள்ள நிலப்பரப்பில் செல்லும். மாலை வேளைகளில் கடல் நீர் பெருக்கெடுத்து நீர் மட்டம் உயரும். இதனால் மாலை நேரத்தில் வேன்கள் மூலம் செல்ல அனுமதி கிடையாது.


இந்நிலையில் இன்று மாலை திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 17 பேர் தனியார் வேன் மூலம் தனுஷ்கோடி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் நீர் பெருக்கெடுத்ததால் பயணிகளுடன் வேன் சிக்கி கொண்டது.
நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்ததால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். 


கூச்சல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மீனவர்கள் மாற்று வாகனங்களுடன் சென்று கடல் நீரில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பரில் கடல் பெருக்கெடுத்து புயல் வீசும் காலமாகும். இந்நேரங்களில் இது போன்ற பயணங்களை தனுஷ்கோடி செல்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
- இரா.மோகன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close