Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மலிவு விலை ஜென்ரிக் மருந்துகள் விற்பனை தொடக்கம்


தமிழகத்தில் முதன்முறையாக மலிவு விலை ஜென்ரிக் (Generic) மருந்துகள் விற்கப்படும்  அரசு மருந்தகம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது. 

ஆன்டிபயாடிக்,  உயிர் காக்கும் மருந்துகள், வலி நிவாரணி என 550  மருந்துகள் அத்தியாவசியமானவை என கணக்கிடப்பட்டிருக்கின்றன. எந்த கம்பெனி பெயரும் இல்லாத (unbranded) இந்த மருந்துகளை ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு ”ஜன் அவ்ஷதி” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மத்திய அரசின் இந்த  ‘ஜன் அவ்ஷதி’  எனும் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு மருந்தகங்கள் திறக்கப்பட்டு, அத்தியாவசியமான மருந்துகள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கோவையில் மத்திய அரசின் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இனி தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close