Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணுஉலைகளுக்கு எதிராக தலைவர்கள் கூட்டறிக்கை

அணுஉலைகளுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

இதுகுறித்து, திருமாவளவன் கூறுகையில்,'கூடங்குளம் அணுஉலை விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும். மற்ற எந்த மாநிலங்களிலும் அணுஉலைகள் கொண்டு வராத நிலையில் தமிழகத்தில் மட்டும் அணுஉலை திட்டத்தைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும்' என்று கூறினார்.

அணுஉலைகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பபாளர் எஸ்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்,'கூடங்குளம் மக்கள் பாதுகாப்புக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்று கூறிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close