Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு பள்ளி ஆசிரியரின் அசத்தல் தயாரிப்பு!

பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்கள் எதையுமே விளையாட்டோடு சேர்த்து எளிமையாக கற்றுக்கொள்ளத்தான் விரும்புவார்கள். அப்படி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேலூர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் சூரிய குமார் ஒரு புதுமையான விஷயத்தை கையாண்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்தில் உள்ள 29 பாடங்களையும் 1௦௦௦ சிலைடுகளில் பவர் பாய்ண்ட்டாக மாற்றி எல்.சி.டி. திரை வழியாக பாடம் நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து சூரிய குமாரிடம் கேட்ட போது,

தொழில் நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. வகுப்பறையும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாற வேண்டும். வகுப்பறை மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களை பிற கவனச்சிதறல்களில் இருந்து மீட்க முடியும். இன்றைக்கு மாணவர்கள் உள்ளங்கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு உலகத்தையே கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் கம்ப்யூட்டரிலும், தொலைக்காட்சியிலும் வண்ணமயமாக செய்திகளையும், படங்களையும் பார்க்கிறான். வகுப்பறையும் அப்படி வண்ணமயமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இப்படி ஒரு சி.டி.யை தயாரித்திருக்கிறேன். பாடத்தோடு தொடர்புடைய பல அரிய படங்கள், முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் படங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ள வீடியோ ஆகியவை மாணவர்களிடம் அப்ளாஸ் அள்ளுகின்றன. எனவே தமிழ், ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளிலும் இந்த சி.டி.ஐ தயாரித்திருக்கிறேன்.

- வெ.வித்யா காயத்ரி
(மாணவப்பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ