Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீலகிரி, காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளிடம் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே நீலகிரி, காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளிடம் அடுத்தடுத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று மாலை 7.45 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. இன்று காலை ரயில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இதேபோல் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்னைக்கு வந்துள்ளது.

இரண்டு ரயில்களும் சிக்னலுக்காக காட்பாடி அருகே கிளிதான்பட்டரை என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது, 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தியுடன் முதலில் காவேரி எக்ஸ்பிரஸில் புகுந்தது. அங்கிருந்த பெண்களிடம் 17 சவரன் நகைகளை இந்த கும்பல் கொள்ளையடித்தது.

பின்னர் நீலகிரி எக்ஸ்பிரஸில் ஏறிய கும்பல், அங்கிருந்த பெண்களிடம் 12 சவரனை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிக்னலுக்காக காத்திருந்த இரண்டு ரயில்களில் உள்ள பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி, படங்கள்: சுமன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close