Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திண்டுக்கல் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மோதுபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தரிசு நிலத்தில், இன்று காலை திடீரென வானத்தில் இருந்து கேஸ்சிலிண்டர் போன்ற கருப்பான ஒரு பொருள் தீ புகையுடன் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த, அப்பகுதி மக்கள் ஒருவித பயத்துடன் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அதிலிருந்து தீ புகை வெளியாகி உள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் மற்ற ஊர்களுக்கும் பரவியதையடுத்து போலீசார் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் மர்ம பொருளை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து ஆய்வாளர்களைக்கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close