Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில்  நிலை கொண்டிருந்த குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது தற்போது வங்ககடல் பகுதியில் விசாகபட்டினத்துக்கு தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில்  மத்திய வங்க கடல் நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும், தென் மற்றும் வட தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் ஆந்திர கடலோர பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் 14 சென்டி மீட்டர் மழையும், காரைக்காலில் 11 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 



 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close