Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக கடந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக நாளை முதல் மீட்பு குழுவினர் சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காகப் படகுகளும் தயார் நிலையில் இருக்கும். இந்த ஒவ்வொரு படகுகள் மூலமும், தலா 10 பேர் வரை மீட்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குப் பிறகு மழை நிலவரத்தைப் பொறுத்து, கூடுதல் படகுகள் மற்றும் மீட்பு குழுவினர் அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


 

எடிட்டர் சாய்ஸ்