Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா நலம் பெற வேண்டி காந்தி, நேதாஜி வேடமிட்டு ஊர்வலம் !

மதுரை : தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற வேண்டி, மதுரையில் மேடை கலைஞர்கள் காந்தி, நேதாஜி, கலாம் போன்ற தலைவர்கள், சினிமா நடிகர்கள் வேடமிட்டு ஊர்வலத்தில் பங்கெடுத்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 43 நாட்களாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா விரைவில் நலம்பெற வலியுறுத்தி, அ.தி.மு.க.வினரால் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரையில் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற வேண்டி, நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டத்து. மதுரை யானைக்கல் வைகை ஆற்றில் பால்குடங்களை எடுத்து வடக்கு மாசி வீதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் மகாத்மா காந்தியடிகள், நேதாஜி, காமராஜர்,  அப்துல்கலாம், முத்துராமலிங்க தேவர் ஆகிய தலைவர்களின் வேடமிட்டும், எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, வடிவேலு போன்ற நடிகர்களின் வேடமிட்டும் கலைஞர்கள் பங்கேற்றனர். மேடை கலைஞர்கள் என்பதால் தத்ரூபமாக மேக்கப் போட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இவர்களோடு கடவுள் வேடமிட்டும் கலைஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தென் மாவட்ட கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அண்மைக் காலமாக இவர்கள் மேடையில் நடனமாட ஏகப்பட்ட நெருக்கடிகளை காவல்துறை கொடுத்து வரும் நிலையில், இந்த ஊர்வலம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- செ.சல்மான்.

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ