Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை டூ தமிழகம்..! 25 ஆண்டுகளாக தொடரும் ரகசிய ஆன்மிக பயணம்

இலங்கையில் இருந்து தமிழக கோயில்களுக்கு 100 இலங்கைத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாக ரகசியமாக ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கந்தசஷ்டியையொட்டி இவர்கள் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதுண்டு. அதன்படி இந்த கந்தசஷ்டிக்கு 26 பேர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவி அருகில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று இலங்கையில் இருந்து 14 பெண்கள் உள்பட 26 பேர் வந்தனர். அகஸ்தியர் அருவியில் குளித்த அவர்கள், அங்குள்ள முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும் க்யூ பிராஞ்ச் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸார் அங்கு வந்து இலங்கைத் தமிழர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். 

இதுகுறித்து இலங்கைத் தமிழர்கள் கூறுகையில், "கந்தசஷ்டியில் பங்கேற்க ஆண்டுதோறும் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வருவோம். எங்களை ராஜபக்சேவின் உறவினர் ஸ்ரீகுமரன் நடேசனின் தலைமையில் அழைத்து வருவார். அதில், 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து ராமேஸ்வரம், நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம், பாபநாசம் முருகன் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வோம். ஒவ்வொரு நாள் இரவும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று தங்குவோம். அதன்படி கடந்த அக்டோபர் 30-ம் தேதி இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளோம்.

 

 

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்த ராஜபக்சேயின் உறவினராக ஸ்ரீகுமரன் நடேசனை அரசியல் கட்சி நிர்வாகிகள் தாக்கினர். இதன்பிறகு தமிழகத்துக்கு வரும் எண்ணிக்கை குறைந்தது. இதனால் இந்த முறை 26 பேர் வந்துள்ளோம். இது எங்களது 25-வது ஆன்மிக பயணம். இலங்கைத் தமிழர் என்பதால் எங்களை போலீஸார் கண்காணிப்பதால் ரகசியமாக எங்களது வருகையை வைத்துள்ளோம். இந்த முறை பிரம்மநாயகம் என்பவரின் தலைமையில் வந்துள்ளோம்" என்றார்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத இலங்கைத் தமிழர் ஒருவர் கூறுகையில், "இலங்கையின் குடியுரிமை பெற்று இருந்தாலும் தமிழகத்துக்கு வரும்போது எங்களுக்குள் ஏற்படும் உணர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. இங்கு இருக்கும் நாட்கள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம், சிவசைலநாதர் கோயிலில் எருமை தானம் செய்யப்பட்டது. இதன்பிறகு எங்களது ஆன்மிக பயணத்தில் சிக்கல்கள் எழுந்தன. இலங்கையில் போர் நடந்தபோது தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் சொல்வதுண்டு. ஆனால் எங்களைப் பொறுத்தவரைக்கும் முருகனை தரிசிக்க அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து கந்தசஷ்டியில் பங்கேற்கிறோம்" என்றார்.

நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ