Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழனி சண்முக நதியில் முதலை: பக்தர்கள் பீதி

பழனி சண்முக நதியில் முதலை இருப்பதாக வெளியான செய்தியால் பக்தர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக திகழும் பெரியாவுடையார் திருக்கோயிலின் அருகே சண்முகநதி ஓடுகிறது. இந்நதியில், நேற்று காலை பக்தர்கள் நீராட வந்தபோது, எதிரே உள்ள கரையில் முதலை இருந்ததை சில பக்தர்கள் கண்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள், உயிர் பயத்தில் அங்கிருந்து ஓடி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு ஆய்வு செய்தபோது, தண்ணீரின் மேல்மட்டத்திலேயே நீந்தியவாறு முதலை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, முதலையைப் பிடிக்க, அமராவதி முதலைப் பண்ணையில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு, முதலையைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே சண்முகநதியில் நீராடும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ