Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று பெய்த மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்து 64 அடியை எட்டியது. இதே போல, கடனாநதி அணை, ராமநதி அணை ஆகியவற்றில் ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்