Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் கைதால் ஒன்று கூடிய காங்கிரஸ் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், கார்த்தி சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நக்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ், ''மத்தியில் உள்ள பாஜக அரசு ஜனநாயகத்துக்கு எதிரானது. காங்கிரஸ் இயக்கம் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. ராகுல் காந்தி விரைவில் பிரதமராவார்'' என்றார்.

காவிரி விவகாரம் தொடர்பாக அண்மையில் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 படம்:ஆ.முத்துக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close