Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ., கைரேகையில் நம்பகத்தன்மை இல்லை: அதிமுக வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி வழக்கு

முதல்வர் ஜெயலலிதா கைரேகையில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, தஞ்சாவூரில் ரங்கசாமி, திருப்பரங்குன்றத்தில் போஸ், புதுச்சேரி நெல்லித்தோப்பில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. அப்போது, அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவில் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், "அதிமுக வேட்பாளர்கள் மனுவில் உள்ள ஜெயலலிதா கைரேகையில் நம்பகத்தன்மை இல்லை. இதனால் அவர்களின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், மனுவை திங்கட்கிழமை விசாரிப்பதாக அறிவித்தனர்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close