Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் அணுகுங்கள்': திருமாவளவனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


2 வாரத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, சென்னை உயர் நீதுிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மீது இரண்டு முறை தாக்குதல் முயற்சி நடந்துள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், உள்ளாட்சி தேர்தல் வருவதால் பாதுகாப்பு வழங்குவது அவசியம்" என்று கூறியிருந்தார். 

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழகத்தில் எந்த தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை" என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. 2 வாரத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம். இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close