Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா கைரேகை வைத்தது ஏன்? அப்போலோவில் பொன்னையன் விளக்கம்

அதிமுக வேட்பாளர்களின் மனுவில் முதல்வர் கைரேகை வைத்தது ஏன் என்பது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, தஞ்சாவூரில் ரங்கசாமி, திருப்பரங்குன்றத்தில் போஸ், புதுச்சேரி நெல்லித்தோப்பில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களின் வேட்பு மனுவில் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, "அதிமுக வேட்பாளர்கள் மனுவில் உள்ள ஜெயலலிதா கைரேகையில் நம்பகத்தன்மை இல்லை. இதனால் அவர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் கைரேகை வைத்தது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு நுரையீரல் தொற்று பூரணமாக குணமாகியுள்ளது. அனைத்து அரசியல் பணிகளையும் செய்யும் அளவுக்கு முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிசியோதெரபி சிகிச்சையால் ஏற்பட்ட கைவலியின் காரணமாக வேட்புமனுவில் முதல்வரின் கைரேகை வைக்கப்பட்டது" என்று கூறினார்.

இதனிடையே, அப்போலோவுக்கு இன்று நடிகை விஜயசாந்தி வந்தார். அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

படங்கள்: ப.சரவணகுமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close