Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக உயர் நீதிமன்றத்தில் சாட்சியம்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில், 2-வது முறையாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அன்றைய தினம் மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ