Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ., உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய 5 பேருக்கு ஜாமீன்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலாே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதுதொடர்பாக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையையும் மீறி வதந்தி பரவியது.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து முகநூலில் வதந்தி பரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயம் மற்றும் பாலசுந்தரம், அந்தோணிஜேசுராஜ், சதீஷ், மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ஜாமீன் கேட்டு 5 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ