Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளின் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!

 

காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக கன்னியாகுமரியில் நாளைத் தொடங்க உள்ள விவசாயிகளின் தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் முதலில் அமைப்பதாக உறுதி கூறிய தலைமை வழக்கறிஞர் பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்துக்குத் தான் அதிகாரமிருக்கிறது என்று திடீரென மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டது. இதன்மூலம் தமிழகம் மிகப்பெரிய அளவில் வஞ்சிக்கப்பட்டு, துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்கெனவே உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நாளை (5.11.2016) துவங்கி, சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி 11.11.2016 வரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரப்புரை பயணத்தை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வாழ்த்தி வரவேற்கிறது.

தமிழக விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு நடத்துகிற பரப்புரை பயணத்தில் வரும் விவசாயிகளை தங்களது மாவட்ட எல்லையில் வரவேற்று உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கும்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் உரிமைகளைக் காப்பதற்காக நடைபெறும் இந்த பரப்புரை பயணத்துக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close