Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விளையாட்டில் பணம் தடையாக இருக்கக் கூடாது - தங்கமகன் மாரியப்பன்


பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான மாரியப்பன் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். 



மாணவர்கள் அளித்த உற்சாக வரவேற்புக்குப் பின்னர், மாரியப்பன் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், 'கிராமப் பகுதிகளில் நல்ல திறமையுள்ள வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உரிய பயிற்சியும் அங்கீகாரமும் அளித்தால் மிகச் சிறந்த வீரர்களாக உருவாகி சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க முடியும். அத்தகைய வீரர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விளையாட்டில் பணம் என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது' என்றார். மாரியப்பனுடன் அவரது பயிற்சியாளரான சத்தியநாராயணாவும் உடன் வந்தார்.


-பி.ஆண்டனிராஜ்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ