Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

தேர்தல் நடைபெற உள்ள தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் தொகுதியில் 15 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒருவர் தனது வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுள்ளார். இதனால், 14 பேர் போட்டியிடுகின்றனர்.

மதுரை திரப்பரங்குன்றத்தில் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்த நிலையில், 2 பேர் திரும்ப பெற்றனர். இதனால், 28 பேர் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் 46 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 7 பேர் மனுக்களைத் திரும்ப பெற்றுள்ளனர். இதனால், 39 பேர் போட்டியிடுகின்றனர்.

நெல்லிதோப்புத் தொகுதியில் 9 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், ஒருவர் திரும்ப பெற்றுள்ளார். இதனால், 8 பேர் போட்டியிடுகின்றனர்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19-ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து வரும் 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close