Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாயிகளின் தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பரப்புரை தொடங்கியது!

 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக அரசியல் லாப நோக்கோடு செயல்படும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் அனைத்துக் கூட்டமைப்பு சங்கம் சார்பாக தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பரப்புரை கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது.

கன்னியாகுமரி முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை செல்லும் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து, அதன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாண்டியன் தொடங்கி வைத்தார். அதன்படி இந்தப் பரப்புரை பயணமானது, குமரி நெல்லை, இராமநாதபுரம், மதுரை, திண்டுகள், கடலூர் வழியாக வரும் 11-ம் தேதி சென்னை வந்தடைகிறது. 

குமரியிலிருந்து சென்னை வரும் வழியெங்கும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ