Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குரூப் 1 தேர்வு அறிவிப்பு வரும் ஒன்பதாம் தேதி வெளியிடப்படும்

இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவில் 15 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். 


இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள்மொழி, தேர்வு நடக்கும் இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,' வரும் நவம்பர் 9-ம் தேதி 85 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும். இன்னும் ஒரு வாரத்தில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். அதைத் தவிர கடந்த ஜூன் மாதத்துக்குப் பின் நடந்த 10 தேர்விற்கான முடிவுகளும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாளை முதல் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் திருத்திய வரையறைகள் வெளியிடப்படும், இந்த திருத்திய வரையறையை தேர்வர்கள் பின்பற்ற வேண்டும்.' என்று கூறினார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ