Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போது தேடி வந்தார், இப்போது விமர்சிக்கிறார்..! வைகோவை சாடிய பிரேமலதா

தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்த வைகோ, இப்போது விமர்சனம் செய்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.

தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருச்சிக்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்பொது அவர் கூறியதாவது, ''தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் 17-ம் தேதி வரை பிரசாரம் செய்ய இருக்கிறேன். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்தல் நியாயமாக நடந்தால் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என்றார்.

விஜயகாந்த் குறித்து வைகோ கூறிய கருத்துக்கு பதில் அளித்த பிரேமலதா, ''வைகோ தினமும் ஒரு கருத்தை கூறுவார். தினமும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அவர் சொல்லும் கருத்துகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று அவர்தான் தேடி வந்தார். இப்போது விமர்சனம் செய்கிறார். இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ