Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.135 கோடி கடனுக்காக பிஆர்பி சொத்தை விற்க அனுமதி கேட்கும் இந்தியன் வங்கி!

பி.ஆர்.பழனிச்சாமியின் கிரானைட் பாலீஸ் ஆலையை விற்க அனுமதிக்கோரி இந்தியன் வங்கி தொடர்ந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பி.ஆர்.பழனிச்சாமியின் நிறுவனம் ரூ.135 கோடி இந்தியன் வங்கியில் கடன் வாங்கியுள்ளது. இந்த பணத்தை அந்த நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் பாலீஸ் ஆலையை விற்க அனுமதிக்கோரி இந்தியன் வங்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிஷாபானு ஆகியோர் கொண்ட அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ