Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்று மாசை தடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவிகள்

கோவையில் காற்று மாசுவைத் தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாணவிகள் மனு கொடுத்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தன்யா, 10-ம் வகுப்பு மாணவி நிவேதா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்று அளித்துள்ளனர்.

அதில், "தங்களது வீட்டின் அருகே தனியார் தொழிற்சாலை இயங்கி வருவதால் காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் தங்களால் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியவில்லை. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லி காற்று மாசு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் காற்று மாசு பிரச்னையை மாணவிகள் கையில் எடுத்துள்ளனர்.

- சின்னத்துரை

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ