Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணை ராணுவப்படை நவம்பர் 10ல் தமிழகம் வருகை

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 12 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் 70 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயும், திருப்பரங்குன்றத்தில் 75 லட்சத்து 99 ஆயிரத்து 240 ரூபாய் ரொக்கமாகவும், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், 3 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதன்படி, தஞ்சாவூர் தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 516 வாக்காளர்களும், அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 347 வாக்காளர்களும், திருப்பரங்குன்றத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 பேரும் வாக்களிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் 12 கம்பெனிகள் 3 தொகுதிகளிலும் வரும் 10-ம் தேதி வர இருப்பதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

- தேவராஜன்                        
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close