Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயன்பாட்டிற்கு முன்பே சேதமடைந்த தனுஷ்கோடி சாலை

1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழி பேரலையில் உருக்குலைந்து போனது துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடி. அன்று முதல் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடியில்   வாழ்வாதாரத்திற்காக மீனவர்கள் குடிசை அமைத்து தங்கியுள்ளனர். இது தவிர ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு புயலின் அழிந்த தனுஷ்கோடி நகரின் கட்டிட மிச்சங்களை காண செல்கின்றனர்.

இந்நிலையில் அழிந்த தனுஷ்கோடிக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. சுமார் 50 கோடி செலவில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து 9 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணி 2014 -ல் துவங்கியது. சில மாதங்களுக்கு முன் சாலை பணிகள் அனைத்தும் முடிந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க தயாராகி இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆவேச அலை அடித்து வருகிறது. இந்த அலைகளில் சிக்கிய புதிய சாலை சுமார் 20 அடி தூரத்திற்கு அரிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. 

புயல் காலமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம். அத்தகைய புயல் காலத்தின் துவக்கத்திலேயே உருவான அலைகளுக்கே இந்த புதிய சாலை தாங்காமல் அரித்து சேதமடைந்து விட்டது. இந்த சாலை முற்றிலும் சேதமடையும் முன் சாலையினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இரா.கோகன்

படங்கள்: உ.பாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close