Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீஸ் கமிஷனருக்கு லதா ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை

குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம், லதா ரஜினிகாந்த் மனு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக லதா ரஜினிகாந்தின் சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அதன் தலைவர் நிர்மல் கொடுத்துள்ள மனுவில், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளையும் மீட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழந்தைகள் கடத்தலை தடுக்க பள்ளிகளில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ