Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நாளில் முதல்வர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார்: அப்போலோவில் பிரபு

முதல்வர் ஜெயலலிதா, 3 நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று நடிகர் பிரபு, அப்போலோ வளாகத்தில் பேட்டி அளித்தார்.

 

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அமைச்சர்களிடமும் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும், வழக்கம் போல், தமது பணிகளை அவர் திறம்பட செய்வார் என்றும், முதல்வர் ஜெயலலிதா, 3 நாட்களில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும் கூறினார். 

படங்கள்: தே.அசோக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ