Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவனைத் தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்டு

 

கடலூரில் பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கடலூரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில், சீருடை அணியாமல் வந்த மாணவனை உடல் கல்வி ஆசிரியர் பாட்சா, கன்னத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாணவனுக்குக் கேட்கும் திறன் பறிபோனதாக அரசு மருத்துவர் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவனைத் தாக்கியது தொடர்பாக, நகராட்சி பள்ளி ஆசிரியர் பாட்சாவை சஸ்பெண்டு செய்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ