Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி பெண்ணின் ஜாமீன் தள்ளுபடி!

 

கரூரைச் சேர்ந்த அனுசுயா என்கிற பெண் முகநூல் மூலம் பலரிடமும் அறிமுகமாகி, தான் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறி தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்நிலையில், தேனியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம், காதலிப்பது போல் நடித்து அவரை திருமணமும் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் வேண்டுமென்றே சண்டை போட்டுக்கொண்டு, பணம் மற்றும் பொருட்களை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார். மேலும், அவர் அமெரிக்கவாசி இல்லை என்பதும் தெரிய வந்தது.

தாம் ஏமாற்றப்பட்டது குறித்து பாண்டியன் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இது போல 4 நபர்களை ஏமாற்றி மோசடி திருமணம் செய்து கொண்டு பணம் பறிப்பதை அனுசுயா தொழிலாக கொண்டவர் என்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில், புகார் தொடர்பாக தம்மைக் கைது செய்யாமல் இருக்க, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு அனுசுயா மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுசுயாவின் முன் ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.


- சண்.சரவணக்குமார்

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close