Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாகையில் விவசாயி உயிரிழப்பு: டெல்டா மாவட்டங்களில் தொடரும் அவலம்! 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கீழ்வேளூர் அருகே உள்ள கீழகாவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதம். இவர், நெற்பயிர் பயிரிட்டுள்ளார். பணம் இல்லாததால் பயிர்கள் கருகி வந்துள்ளன. இதனால், வேதனையில் இருந்த நவநீதம் இன்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது, பயிர்கள் கருகி கிடப்பதைக் கண்டு வேதனை அடைந்ததோடு, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பணமில்லாததால் வேதனையில் நவநீதம் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே திருவாரூரில் 2 விவசாயிகளும், தஞ்சாவூரில் ஒரு விவசாயும் உயிரிழந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ