Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் போலி மருத்துவர்கள் சிக்கினர்!

 


மதுரை மாவட்டத்தில் கிளினிக் நடத்திய 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் முகமது ஹனிபா என்பவர், பழைய பி.யூ.சி பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரூரில் கம்பவுண்டராக பணியாற்றி வந்திருக்கிறார். அதன் பிறகு, மதுரைக்கு வந்த அவர், தன்னை மருத்துவர் என்று சொல்லி கிளினிக் நடத்தி மக்களை ஏமாற்றி வைத்தியம் பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில், ரகசியமாக வந்த புகாரையடுத்து, முகமது ஹனிபாவின் கிளினிக்கை ஊரக வளர்ச்சி மற்றும் பொது மருத்துவம் இணை இயக்குநர் டாக்டர் ருக்மணி  ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட நோய்களுக்கு என்ன மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என்று, இரண்டு ஏ4 சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு  மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

அதே போல் மதுரையை அடுத்த வாடிப்பட்டியில், கொல்கத்தாவைச் சேர்ந்த உத்து பால்சர்க்கார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கிளினிக்கில் திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள், உத்து பால்சர்க்கார், கொல்கத்தாவில் 10-ம் வகுப்பு படித்து விட்டு தமிழகம் வந்து டாக்டர் என்று சொல்லிக்கொண்டு, இத்தனை நாட்களாக கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பொது மருத்துவம் இணை இயக்குநர் டாக்டர் ருக்மணி தெரிவித்தார்.

- சண்.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ