Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் மேல ஏன் ஆசிட் அடிச்சாங்க தெரியுமா..!?’ நெல்லை பெண்ணின் வாக்குமூலம்

என் மீது ஆசிட் வீசியதற்கு ஒருதலைக்காதலே காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமலட்சுமி. இவர் மீது சின்னராசு என்பவர் நேற்று ஆசிட் வீசினார். இதில் பலத்த காயம் அடைந்த ராமலட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலட்சுமி, போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், "நான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள பேபிலட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன். அப்போது பேபி லட்சுமியின் தம்பி சின்னராசு அங்கு அடிக்கடி வருவார். எனக்கும், என்னுடைய கணவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் தகவல் சின்னராசுக்கு தெரிந்ததால் அவர், என்னிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நேரில் சொன்னதோடு, போனிலும் தொந்தரவு கொடுத்தார்.

சின்னராசுவின் இந்த நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பேபிலட்சுமியிடம் சொல்லி, சின்னராசுவை கண்டிக்கச் சொன்னேன். இதில் ஆத்திரமடைந்த சின்னராசு, கடந்த 7.11.2016 மதியம் 12 மணியளவில் வண்ணாரப்பேட்டை பைபாஸ் சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நான் நடந்து சென்றபோது, சின்னராசு அங்கு வந்தார். அப்போது என்னுடைய கன்னத்தில் அவர் அடித்தார். இதில் மயங்கி விழுந்தேன். இதன்பிறகு என்னுடைய கழுத்தை நையிலான் கயிறால் சின்னராசு நெரித்தார். இதில் எனக்கு திடீரென மயக்கம் தெளிந்தது. அப்போது, சின்னராசு,  ''என்ன திமிரு இருந்தால் என்னைப்பற்றி என் அக்காவிடம் சொல்லுவ. நீ இதோடு சாவு'' என்று சொல்லியவாறே கயிறால் நெரித்தார் சின்னராசு. அவரது பிடியிலிருந்து தப்ப நான் முயன்றபோது சின்னராசு, ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீர் போன்ற திரவத்தை என்னுடைய முகத்தில் ஊற்றினார். அது என்னுடைய முகம், இடது தொடை, வலது கால் ஆகிய இடங்களில் பட்டு காயங்கள் ஏற்பட்டன" என்று போலீஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராமலட்சுமி மீது ஆசிட் ஊற்றிய ஆட்டோ டிரைவர் சின்னராசுவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ