Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க.வில் இணைந்த திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர்!

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மோகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார்.

அதிமுக எம்எலஏ சீனிவேல் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 28 பேர் களத்தில் நிற்கின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர் மோகனும் அடங்கும்.

இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் மோகன், அதிமுகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி.உதயகுமார் முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

- சண்.சரவணகுமார் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close