Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். தாக்குதல் பட்டியலில் கொடைக்கானல் ! நவீன ஆயுதங்களுடன் மத்திய போலீஸ் படை குவிப்பு

திண்டுக்கல் : மலைப்பிரதேசமான கொடைக்கானல் ஐ.எஸ். தாக்குதல் பட்டியலில் இருப்பதாக சொல்லப்பட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்கப்படக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால் நவீனரக துப்பாக்கிகளுடன் மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத்தளமான கொடைக்கானலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுவறுவ வாய்ப்பு உள்ளது என தமிழக அரசுக்கு மத்திய உளவுத்துறை அறிக்கையளித்தது. அதைத்தொடர்ந்து மாநில போலீசார் கொடைக்கானலில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது டெல்லியைச் சேர்ந்த அதிவிரைவு அதிரடிப்படையினர் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பாக கேரள மாநிலத்தில் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் ஆறு பேரை மத்திய உளவுத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் தங்கும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து வட்டக்கானல் உள்ளிட்ட கொடைக்கானலின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், கொடைக்கானல் வந்துள்ள அதிவிரைவுப்படை வீரர்கள், கொடைக்கானலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுவல் இருக்கிறதா? நக்சல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா? நகரின் முக்கிய இடங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு நடத்துகின்றனர்.

இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் முழுமையான சோதனைக்கு பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இஸ்ரேல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கும் வட்டக்கானல் பகுதியின் நுழைவாயிலில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு, உள்ளே செல்லும் அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் பதிவாகும் எண்கள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

- ஆர்.குமரேசன்,

படங்கள் : வீ. சிவக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ