Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

 


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வாரியூரைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவருக்கும், சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சாந்தி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இசக்கியப்பன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, சாந்தியைக் கொடுமை படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தி, நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்ற முயன்றார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார், கணவரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளனர். 

-த.ராம்

 

எடிட்டர் சாய்ஸ்