Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வடகிழக்கு பருவமழை கொஞ்சம் கஷ்டம் தான்’ அதிர்ச்சி ஏற்படுத்தும் அமெரிக்க வானிலை ஆய்வுமையம்..

டந்த ஆண்டு பெய்த பெருமழையைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், வறட்சியால் தவித்த விவசாயிகளும், குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்களும் வடகிழக்கு பருவமழையே பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். 

இந்நிலையில், வழக்கத்தை விட தாமதமாக அக்டோபர் 31-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, ஓரிரு நாட்கள் பெய்தது. அதைத் தொடர்ந்து வெயில் வாட்ட தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்ற வானிலை அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக போதுமான மழை இல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டன.

இதனால் பசுமையான தோட்டங்கள், தரிசுகளாக மாறிவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த உலக வானிலை மையம், அடுத்த மூன்று வாரங்களுக்கு குறைந்த அளவே மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில், ‘‘ வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட 60 சதவிகிதம் குறைவாக பெய்யும் என முன்கணிப்புகள் தெரிவிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஆண்டு (2015) தமிழகத்தில் இயல்பான மழையளவில்152 சதவிகிதம் பெய்தது. அதே நேரம் இந்த ஆண்டு இயல்பான மழையளவில் 90 சதவிகிதம் மட்டுமே பெய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த விவரங்கள்படி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 60 சதவிகிதம் குறைவான மழை என கணிக்கப்பட்டுள்ளது.  

கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் கடலின் வெப்பநிலை சராசரியை விடகுறைவாக உள்ளது. இது வடகிழக்குபருவமழையின் இயல்பான அளவை பாதிக்கும். அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பரப்பில் தென்மாநிலங்கள் அருகே உருவாகும் மேல் அடுக்கு சுழற்சிகளும், காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் தென்மேற்கு பகுதியில் இருந்து வரும் காற்றால், வேறு நாடுகளுக்கு நகர்ந்து விடுகிறது. இது போன்ற நிகழ்வுகள் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக இல்லை.’’ என தெரிவித்துள்ளது.

தற்போதே குடிநீருக்கு காலிக்குடங்களுடன் மக்கள் அலையும் நிலையும், வடகிழக்கு பருவம்ழையும் பொய்த்தால், கோடை காலங்களில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலை உருவாகலாம். 

- ஆர்.குமரேசன்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ